வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் ஹானோய், உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக உள்ளது. காற்று மாசை குறைப்பதற்காக, வியட்நாம் பெற்றோல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அடுத்த வருடம் ஜூலை முதல் ஹானோய் நகரில், பெற்றோலில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும், ஒரு சில கார்களுக்கும் தடை விதிக்க வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளது.








