யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் சுபாஷினி எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, தொண்டைமனாறு செல்வச் சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் பெண் ஒருவர் உடலமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் புகைப்படங்கள் செய்திகளில் வெளியாகி இருந்தன.
இந்தநிலையில், அவரது தந்தையார் தனது மகளை அடையாளம் கண்ட நிலையில், அச்சுவேலி காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கப்பட்ட உடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








