Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர!

15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர!

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை ‘டுபாய் லொக்காவின்’ ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேக நபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, சந்தேக நபர்கள் கேகிராவ பகுதியில் மறைந்திருப்பது அடையாளம் காணப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்றுமுன்தினம் (26) அதிகாலை கேகிராவ பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

அங்கு பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.

கைது செய்ய முற்பட்டபோது பொலிஸாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அதில் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

அவ்வாறு தப்பிச் சென்றவர் பிரதேச சபைத் தலைவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பல வழிகளில் சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்றார். பினனர் மஹரகமவில் வைத்து விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் புலனாய்வு அதிகாரிகளும் துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.

அதனையடுத்து பிரதேச சபைத் தலைவரின் கொலையை சுமார் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி துப்பாக்கிதாரியையும் கேகிராவில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உட்பட 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட சந்தேக நபர்கள் குழு நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

July 23, 2026
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

July 23, 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
Next Post
மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு