Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேஸ்புக் விருந்து என்னும் பெயரில் போதைப்பொருள் பயன்பாடு; 4 யுவதிகள் உட்பட 22 இளைஞர்கள் கைது

பேஸ்புக் விருந்து என்னும் பெயரில் போதைப்பொருள் பயன்பாடு; 4 யுவதிகள் உட்பட 22 இளைஞர்கள் கைது

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.

இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரம்,

ஐஸ் போதைப்பொருள் – 4134 மி.கி

ஹேஸ் (Hash) – 1875 மி.கி

குஷ் (Kush) – 2769 மி.கி

கொக்கேய்ன் – 390 மி.கி

மஷ்ரூம் (Mushroom) போதைப்பொருள் – 804 மி.கி

போதை மாத்திரைகள் – 13 சட்டவிரோத சிகரெட்டுகள் – 12 கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட யுவதிகள் 21 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், கண்டி, நீர்கொழும்பு மற்றும் பூண்டுலோயா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் (13) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்
செய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

August 22, 2026
மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
செய்திகள்

மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

August 22, 2026
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!
உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக கங்கா ஆரத்தி!

August 22, 2026
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்
செய்திகள்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்

August 22, 2026
சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!

August 22, 2026
இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

August 22, 2026
Next Post
வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை வீதியோர வியாபாரங்களுக்கு தடை விதிப்பு

வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை வீதியோர வியாபாரங்களுக்கு தடை விதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு