Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“3 பேருடைய 25000 ரூபாய் வேறு வங்கிக்கு வைப்பு”:கிராம சேவகர் சாக்குபோக்கு கூறுகிறாராம்-பாலமீன்மடுவில் தொடரும் அவலம்

“3 பேருடைய 25000 ரூபாய் வேறு வங்கிக்கு வைப்பு”:கிராம சேவகர் சாக்குபோக்கு கூறுகிறாராம்-பாலமீன்மடுவில் தொடரும் அவலம்

7 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று பேருக்கு இதுவரை நிதி வைப்பு செய்யப்படவில்லை, இந்த நிதி எங்கே? இந்த நிதிக்கு என்ன நடந்தது? இது தொடர்பாக பிரதேச செயலாளர் விசாரணை மேற்கொண்டு இதில் ஊழல்கள் நடந்திருந்தால் ஊழல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வாராந்த ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் நவம்பர் மாதம் 27,28 ம் திகதி நடந்தேறிய அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்காததற்கு கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கே காரணம்.

கடந்த காலத்தில் ஊடக சந்திப்பு ஊடாக பாலமீன்மடு கிராமத்திலே ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டினால் 25 பேருக்கு வீடு சுத்திகரிப்புக்கு என நிவாரணமாக 25 ஆயிரம் ரூபா மற்றும் நிவாரணப் பொதி வழங்கப்பட்டது. இந்த குளறுபடி தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு இது சம்பந்தமான விசேட குழு ஒன்றை அமைத்து, இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்கும்படி ஜனாதிபதி செயலகம் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தினர்.

இருந்தபோதும் அரசியல் கட்சியின் சிபார்சில் 25 பேருக்கு கடந்த 9 ம் திகதி வழங்கப்பட்ட நிதியில் 3 பேருக்கு இதுவரை நிதி கிடைக்கவில்லை. மகாலிங்கம் என்பவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை அவர் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது உங்கள் மகளுக்கு வழங்கப்பட்டதால் உங்களுக்கு வழங்க முடியாது என்றார்.

அவ்வாறு ரி. மனோ ராணி கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டபோது அவர் அடையாள அட்டையில் இலக்கம் ஒன்று பிழையாக இருப்பதால் வேறு நபர் ஒருவருக்கு அந்த பணம் சென்றுள்ளது அதை பெற்றுத் தருகிறேன் என்றார். இவ்வாறு போல் தனஞ்சுதன் வங்கிக்கும் நிதி வைப்பிலிடவில்லை என்றதுடன் கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டபோது உங்கள் வங்கி கணக்கில் 7 என்ற இலக்கம் ஒன்றாக மாற்றப்பட்டதால் வேறு நபருக்கு அந்த நிதி சென்றுள்ளது அதை 2 நாட்களில் பெற்று தருவதாக கூறியுள்ளனர் ஆனால் இன்று வரைக்கும் அந்த நிதி கிடைக்கவில்லை.

நாங்கள் வேண்டும் என்று எந்த அதிகாரிகளுக்கும் எதிராக ஊடக சந்திப்பு மேற்கொள்ளவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் எங்களுக்கு வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த ஊடக சந்திப்பை ஏற்படுத்தியுள்ளோம். அரசியல் கட்சி சார்ந்து இது வழங்கப்பட்டது என அறிந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்று அது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு குழு ஒன்றை நியமித்து பார்வையிடுமாறு தெரிவித்ததற்கு இணங்க, பிரதேச செயலாளர் 9 பேர் கொண்ட விசேட குழு ஒன்றை அமைப்பதற்கு அவருக்கு நன்றிகள்.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள், விடுபட்டவர்களுக்கு இந்த நிதி கிடைக்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே 25 பேரின் பெயர் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்ட 22 பேருக்கு வைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த 3 நபர்களுக்கும் வைப்பு செய்யப்பட்ட வில்லை எனவே இந்த 3 பேரின் நிதி எங்கே? இந்த நிதிக்கு என்ன நடந்தது? இதில் ஊழல்கள் நடந்திருக்கின்றதா?

இவ்வாறு பாலமீன்மடுவில் அரசியல் கட்சியினால் பக்கசார்பாக 25 பேருக்கு வழங்கப்பட்டது என நாங்கள் ஊடகத்திற்கு கொண்டு வந்த பின்னர்தான் இந்த விசேட குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 20 ம் திகதி பாலமீன்மடு வில் மட்டிக்கழி கலைவேந்தன், பாலமீன்மடு விளையாட்டு கழகம், லைற்கவுஸ் விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர் கழகம் கலந்து கொண்டு பாலமீன்மடு அமைப்புகள் எல்லாம் விஷமிகள் என தெரிவித்துள்ளனர்.

அந்த ஊடக சந்திப்பு முறைகேடாக 25 பேருக்கு மட்டும் நிதி வழங்கியது தொடர்பான சம்பவத்தை மூடி மறைப்பதற்காகவும், இந்த அரச அதிகாரிகளை காப்பாற்றுவதற்குமான இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை பெரிய உப்போடை பிரிவிலே 178 ஏ என்ற பிரிவிலே 1238 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் எத்தனை பேருக்கு நிதி வழங்கப்பட்டது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக கிராம அதிகாரியை தொடர்பு கொண்டு எத்தனை பேருக்கு நிதி வழங்கப்பட்டது அதற்கான அறிக்கையை கோரிய போது அவர் அதை தர மறுத்து விட்டார்.

இந்த நிலையில் குறித்த கிராம உத்தியோகத்தரிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்மா ஒருவர் சென்று எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்த போது அவர் இந்த பிரதேசத்தில் பனடோலை நிவாரணமாக வழங்கினால். அதில் பாதி பனடோலை தருமாறு கேட்கும் மக்கள்தான் நீங்கள் என அவமதித்து அநாகரீகமான பேச்சுக்கள் பேசி தவறான ரீதியில் மக்களை நடத்தி, கொதி நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கும் இந்த கிரா உத்தியோகத்தரை விசாரணை செய்து உடனடியாக இடம் மாற்றவும்.

எனவே இவ்வாறு ஒரு சில அரச அதிகாரிகள் நடந்து கொள்வது கடந்தகால எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார்களா? இவர்கள் இவ்வாறு செயற்பாட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் அப்போது இந்த அரசாங்கத்தை கவுக்கலாம் என்ற என்னப்பாட்டுடன் இவர்கள் செயற்படுகின்றார்களா?

வெள்ள காலத்தில் நீங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு பார்வையிடாமல் பாதிக்கப்பட்ட மக்களிடம் போட்டோ எடுத்ததா, வீடியோ எடுத்ததா போன்ற பல விடையங்களை கேட்கின்றார்கள். உண்மையில் கள விஜயம் மேற்கொள்ள வேண்டியது உங்கள் கடமை, மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மறந்துவிட கூடாது.

இவ்வாறான நிலையில் மக்களிடம் ஏன் தரவுகளை கேட்கின்றீர்கள் நீங்கள் கள வியையத்தை மேற்கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிதியை வழங்கினால் இன்று மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய தேவை இல்லை. இவர்கள் கடந்த கால ஆட்சி செய்தவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகின்றார்களா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிதிகளை வழங்கும் போது கிராம உத்தியோகத்தரின் காரியாலயத்தில் உள்ள அறிவித்தல் பலகைகளில் நிதி வழங்கியவர்களின் பெயர் பட்டியலை ஏன் வெளியிட முடியாது. எனவே எல்லா பிரதேசங்களிலும் நிவாரணம் வழங்கியவர்களின் பெயர் பட்டியலை ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்களின் காரியாலயத்தில் காட்சிப்பட வெளியிட வேண்டும். அப்போது தான் என்ன மோசடி நடந்திருக்கின்றது அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் கிடைத்திருக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
நாளை இயேசு தேவன் பிறந்தநாள்; மட்டக்களப்பில் மக்கள் கொண்டாட்டம்

நாளை இயேசு தேவன் பிறந்தநாள்; மட்டக்களப்பில் மக்கள் கொண்டாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.