Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நோர்வூட்டில் மதுபானசாலையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

நோர்வூட்டில் மதுபானசாலையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் கோரி இன்று (03) காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி”, “சிறுவர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் மதுபோதை”, “பாடசாலை இடைவிலகலுக்குக் காரணமாகும் மதுபானசாலைகள்”, “வெஞ்சரின் எதிர்காலம் மதுபோதையில்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மதுபானசாலை குடியிருப்புப் பகுதியில் இயங்குவதால், அருகிலுள்ள ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், தோட்டப் பகுதியில் இந்த மதுபானசாலை அமைந்துள்ளதால், பலர் மாதாந்த சம்பள அடிப்படையில் கடன் புத்தகத்தில் பதிவு செய்து மதுபானம் அருந்தி வருகின்றனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சுமார் 1,500 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடும் இந்த மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்புக்காகப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

கல்முனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன்; சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

October 8, 2026
இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்
செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட கொழும்பு கோட்டை நீதவான் மீண்டும் பதவியில்

October 8, 2026
அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!
செய்திகள்

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
Next Post
அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் சடலம் மீட்பு

அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு