அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபேசன் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (05) காலை திருக்கோவில் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சமுகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் தம்பிராசா தவராசா தலைமையில் பாடசாலை காலை ஒன்று கூடல் வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சபேசன் பூமாலை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை சமுகத்தினால் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் சபேசனால் கல்வி சார் பாடல் ஒன்று மாணவர்களுக்காக பாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









