மாளிகைக்காடு பகுதியில் கடலரிப்பு மிகத் தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள மையவாடி (மயானம்) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்பட்டுவரும் கடலலைகள் நிலப்பகுதிக்குள் ஊடுருவி மையவாடி பகுதிகளை அரித்துச் செல்லும் நிலையில், அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த சில ஜனாஸாக்கள் வெளிப்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் மிகுந்த உணர்வுப்பூர்வமான இந்த நிலை குறித்து மக்கள் ஆழ்ந்த வேதனை வெளியிட்டுள்ளனர்.
எனவே, மையவாடியை பாதுகாக்கும் வகையில் உடனடி தற்கால நடவடிக்கைகளையும், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் நிரந்தர கரைப்பாதுகாப்பு திட்டங்களையும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











