Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்; பொலிஸார் எச்சரிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்; பொலிஸார் எச்சரிக்கை

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டம், நூறு சதவீதம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

இதற்கமைய, நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்கும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டிகளை கட்டாயம் அணிய வேண்டுமென பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்தாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒழுங்குமுறை, கடந்த முதலாம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தப்பட்டது.

இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து தரப்பினரும் தற்போது ஆசனப்பட்டிகளை அணிய வேண்டுமென பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பயணி ஒருவர் ஆசனப்பட்டியை அணியாதிருப்பது கண்டறியப்படுமாயின், பயணி மற்றும் சாரதி இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்துகள் நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படாது.

இதற்கமைய, மேலதிக பயணிகள் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு முன்பாக இறக்கிவிடப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள வீதிகளில் உந்துருளி பந்தயங்கள் உடனடியாக நிறுத்தப்படும் எனவும், இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
Next Post
“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்

“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு