Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“பாட்டிக்கு பாட்டன் என்று போடப்பட்டுள்ளது”; மீண்டும் புத்தகத்தில் பிழை என்கிறார் திலித் ஜயவீர

“பாட்டிக்கு பாட்டன் என்று போடப்பட்டுள்ளது”; மீண்டும் புத்தகத்தில் பிழை என்கிறார் திலித் ஜயவீர

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

பதவிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“நவீன கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் கூறத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலாவது அரிச்சுவடிப் புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தவறுகளே உள்ளன. அரசாங்கம் கொண்டுவரும் விடயத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று யாராவது சொன்னால் அது மிகப்பெரிய முட்டாள்தனமான கதையாகும்.

இதில் ஒரு ‘சிறப்பான’ புத்தகம் உள்ளது. ஆறாம் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்டு புத்தகத்தில் உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்களின் பெயர்கள் உள்ளன. முதலாமவர் – ஏ.டி. ஆரியரத்ன. ஏ.டி. ஆரியரத்ன தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், உலகத்தில் யார் நினைக்கிறார்கள்? இலங்கையில் யார் நினைக்கிறார்கள்? உபாலி விஜேவர்தன வாழ்ந்த நாடு இது. அடுத்ததாக எமது சித்தாலோப முதலாளியைப் போட்டுள்ளார்கள். உலகப் புகழ் பெற்ற இரண்டாவது தொழில் முயற்சியாளர் ஹெட்டிகொட அவர்களாம். மூன்றாவது இடத்தில், சிறிய கடையொன்றை நடத்திச் செல்லும் அச்சலா என்ற எனக்குத் தெரிந்த தங்கையொருவரின் பெயரைப் போட்டுள்ளார்கள். அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்டபோது, தனது பெயர் ஏன் போடப்பட்டுள்ளது என்று அவருக்கே தெரியவில்லை.

அடுத்ததாக பில் கேட்ஸ் உள்ளார், அதன் பிறகு வாரன் பஃபெட் உள்ளார். அதன் பிறகு எலான் மஸ்க். இவர்களுக்கு இடையில்தான் ஹெட்டிகொடவின் பெயரும், ஆரியரத்னவின் பெயரும் உள்ளது. இவர்களுக்குப் பைத்தியமா? உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்கள் என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உலகையே அதிரவைத்த தொழில் முயற்சியாளர்கள். இப்போதும் அதிரவைக்கும் வர்த்தக நாமங்கள் எத்தனை உள்ளன? இந்தப் பக்கத்தை வாசித்த எந்தவொரு சிறுபிள்ளையும் வாழ்க்கையில் தொழில் முயற்சியான்மையைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தத் தொகுதிகளில் என்ன இருக்கிறது என்று நீங்களே சும்மா வாசித்துப் பாருங்கள்.

ஆகவே இதனைச் சீர்திருத்துங்கள் என்றே நாம் சொல்கிறோம். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். நாங்கள் யோசனைகளை முன்வைக்கிறோம். முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பித்து, பெற்றோரின் கருத்துக்களைப் பெற்று, பிள்ளைகளின் கருத்துக்களைப் பெற்று, ஆசிரியர்களின் கருத்துக்களைப் பெற்று, கல்வி நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று இதனைச் செய்வோம் என்றே சொல்கிறோம். வேண்டாம் என்று சொல்லவில்லை.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!
செய்திகள்

மன்னாரில் தலைதூக்கிய தொடர் திருட்டு; ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை!

October 7, 2026
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?
செய்திகள்

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் 4 புதிய மதுபானசாலைகள்?

October 7, 2026
கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிளிநொச்சியில் 17 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

October 7, 2026
மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு
செய்திகள்

மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி; சவூதிக்கு சென்ற இலங்கை சட்டத்தரணிகள் குழு

October 7, 2026
Next Post
சொர்க்கம் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு?; இயற்பியல் விரிவுரையாளரின் கோட்பாடு

சொர்க்கம் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு?; இயற்பியல் விரிவுரையாளரின் கோட்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.