இதுவரை இலங்கையில் உள்ள எந்த அரசிலும் நடைபெறாத அடக்குமுறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் தொடங்கிய இலங்கையின் 78 வது சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டத்தை வழமையாக போராட்டம் நடத்தும் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை செல்ல விடாது மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளப்பாளத்தில் முன்னால் போராட்டத்தை பொலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் கல்லடிப் பாலத்தில் ஆரம்பித்த போராட்டம் மட்டக்களப்பு நகரின் வெள்ளைப் பாலத்தின் முன்னால் பொலீசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இன் நிலையில் போராட்டத்தை மேற்கொண்டு நடத்த முடியாத நிலையில் குறித்த போராட்டத்தை அந்த இடத்திலேயே நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற சுதந்திர தின கரிநாள் போராட்டங்களுக்கு பொலிசார் பல நீதிமன்ற தடைகளை பெற்று பல்வேறுபட்ட தடைகளை உருவாக்கிய நிலையில்
பொலீசாரின் தடைகளை உடைத்து போராட்டத்தை முன் நகர்த்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் தடைகள் உடைக்கப்பட்டு போராட்டத்தை வழிநடத்தியிருந்தனர்.

ஆனால் இன்றை போராட்டத்தை பொலிசாரின் கட்டளைக்கு இணங்க நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை இடையிலேயே கைவிட வேண்டிய நிலை போராட்டக்காரர்களுக்கு உருவாகியது.
இன் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகத்தினர் பொலிசாரின் தடையை உடைத்து காந்தி பூங்கா ஊடாக செல்ல வேண்டும் என கோசம் எழுப்பிய தோடு பொலிசாருடன் முரண்பட்டும், காந்தி பூங்காவிற்கு செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை பொலிசார் தடுத்து நிறுத்தியதால் பொலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகியது.
இதனால் போராட்டத்தை மட்டக்களப்பு வெள்ளைப்பாளத்திற்கு முன்பாகவே நிறைவு செய்ததோடு. போராட்டத்தின் நிறைவில் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் இலங்கையின் 78 வது சுதந்திர தின கரிநாள் போராட்டம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டன.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிழக்கு மாகாண சங்க தலைவிகளினால் சுதந்திர தின கரிநாள் போராட்டம் தொடர்பான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன.








