“வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று மாலை மெழுகுவர்த்தி ஒளிச் சுடர் ஏற்றல் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் இனிது நிறைவு பெற்றது.
குறித்த நிகழ்வில் அருட் தந்தை அந்தோனி செபாஸ்டியன் ரெவல் கலந்து சிறப்பித்தார்.
பிள்ளைகளின் தந்தைமாருக்கான மது ஒழிப்பு தொடர்பான கருத்தரங்காக இது அமைத்திருந்து.
இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையின் மூதுர்.வாகரை சேகரத்தின் பாட்டாளி புரம் மெதடிஸ்த்த திருச்சபையின் “எபநேசர்” சிறுவர் அபிவிருத்தி திட்டத்தினால் குறித்த நிகழ்வு வாகரை மெதடிஸ்த திருச்சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வாகரை, மூதூர் சேகரத்தின் முகாமையாளரும் சிறுவர் அபிருத்தி திட்டத்தினுடைய பணிப்பாளருமான அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வானது
16.02.2026. – 17 .02.2026 ஆகிய இருதினங்கள் நடைபெற்றது.
“உன்னை நீ நேசி”. “நாமும் நமது குடும்பமும்” ” நமது வாழ்வு நமது கையில்” ” நாம் எப்பொழுதும் பெறுமதி மிக்கவர்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கு பற்றியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.















