Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற கண்காட்சி!

சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற கண்காட்சி!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு அனைத்து இன மக்களும் கலந்து கொண்ட உணவு கண்காட்சியொன்று நேற்று (21) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.

உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல் என்னும் தொனிப்பொருளில் இந்த உணவு திருவிழா மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகளைக்கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது.

பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் ஒழுங்கமைப்பிலும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் அருளானந்தம் அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

மூத்தோர்களின் நினைவுகளிலிருந்தும் அவர்களின் அனுபவங்களிலிருந்தும் கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன,மறைக்கப்பட்ட எமது முன்னோர்களின் உருவாக்கங்களான ஊட்டமான உணவுகளின் சுவையினை எமதாக்கிக்கொள்ளும் சுகநலவாழ்விற்கான பயணம் என்னும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வேடுவசமூகத்தின் உணவுகள்,இஸ்லாமிய மக்களின் உணவுகள்,இந்து சமூகத்தின் உணவுகள்,பறங்கிய சமூகத்தின் உணவுகள்,சிங்கள சமூகத்தின் உணவுகள் என மட்டக்களப்பில் வசிக்கும் அனைத்து இனமக்களினதும் பண்டைய உணவுகள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பெருமளவான பொதுமக்களும் மாணவர்களும் இந்த கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் உணவினையும் சுவைத்துச்சென்றதை காணமுடிந்தது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
கல்கிசையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

கல்கிசையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இளம் பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு