Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சை இணைய இணைப்பு; உடனடியாக கைது செய்யுமாறு சிஐடிக்கு அதிரடி உத்தரவு

தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சை இணைய இணைப்பு; உடனடியாக கைது செய்யுமாறு சிஐடிக்கு அதிரடி உத்தரவு

5 months ago
in செய்திகள்

தரம் 6 பாடப்புத்தகத்தில் பதிவான பொருத்தமற்ற இணையதள இணைப்பு, விவகாரத்தில் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று முந்தினம் (20) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்ட மை தொடர்பான வழக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தரம் 6 மாணவர்களுக்கான புதிய ஆங்கிலப் பாடத் தொகுப்பில், ஒரு பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த கியூஆர் குறியீடு அல்லது இணையதள இணைப்பு, ஆபாசமான அல்லது தகுதியற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதளத்திற்கு இட்டுச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அச்சு மற்றும் பாடத்திட்டத் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

சிறைச்சாலை உத்தியோகத்தரின் கையை வெட்டி திருடியவர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு