உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அரசு புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி சஜீவ மெதவத்தவும் தெரிவித்தார்.
காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நீண்ட விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று மேலும் கூறியள்ளார்.








