Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம்”; சுரேஷ் சலே கைதை வரவேற்கும் கத்தோலிக்க திருச்சபை

“ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம்”; சுரேஷ் சலே கைதை வரவேற்கும் கத்தோலிக்க திருச்சபை

6 months ago
in செய்திகள்

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையைக் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் கத்தோலிக்க திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில், சுரேஷ் சலே நேற்று பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்தக் கைது நடவடிக்கையானது, விசாரணைகள் சரியான திசையில் தொடர்கின்றன என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும். எமக்குத் தேவையானது ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மறைந்துள்ள உண்மைகளே தவிர வெறும் கைதுகள் மாத்திரமல்ல. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கொழும்பு மறைமாவட்டத்திற்கான ஊடக பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி அறிவித்துள்ளார்..

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
எப்ஸ்டீன் விவகாரம்; ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

எப்ஸ்டீன் விவகாரம்; ரஷ்ய பெண்கள் உடனான உறவை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு