Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஐக்​கிய அரபு இராச்சியத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று (15) ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யுள்ளது.

ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசு​வில் அந்த நாட்​டின் இராணுவ தளம் உள்​ளது. அங்கு ஏவுகணை​கள் சேமித்து வைக்கப்பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகியுள்​ளன. இதைத் தொடர்ந்து சிராசு​வில் உள்ள இராணுவ முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று தாக்​குதல் நடத்தியுள்ளன.

இதில் ஈரான் இராணுவ தளங்​கள் கடுமை​யாக சேதமடைந்​தன. இதே​போல ஈரானின் இஸ்​ப​கானில் உள்ள இராணுவ முகாம்​களை குறி​வைத்​தும் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான் வழி தாக்​குதலை நடத்​தின. ஈரான் முழு​வதும் இது​வரை 1,400-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்​ளனர். அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு பதிலடி​யாக மத்திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை மேற்கொண்டுள்ளது.

ஐக்​கிய அரபு இராச்சிய தலைநகர் அபு​தாபி, துபாய் பகு​தி​களில் அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் செயல்​படு​கின்​றன. இந்த தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் துபாய் மெரினா கடற்​கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவு​கணை​கள் விழுந்து வெடித்​துச் சிதறின.

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தியது. இந்த தாக்​குதலால் துறை​முகத்தை ஒட்​டி​யுள்ள எண்ணெய் கிடங்​கு​கள் தீப்​பிடித்து எரி​கின்​றன. அங்கு 2-வது நாளாக நேற்​றும் எண்​ணெய் கிடங்​கு​கள் கொழுந்​து​விட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
Next Post
நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு