Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

4 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம்(17) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற குறித்த மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த பிரதேசத்தினை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக குழுவினர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போது அப்பிரதேசம் குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்புப்பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் அந்த பாதுகாப்புபட்டிகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டமையால் குறித்த பிரதேசத்தினை நீதவான் பரிசீலனை செய்வதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்திற்கமைய இன்றைய குறித்த விஜயம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் இன்றைய விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த வழக்கின் சட்டத்தரணி முபாரக் முஹாசன் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் 30ம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சட்டத்தரணி முபாரக் முஹாசன் தெரிவிக்கையில், குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கானது கடந்த மார்ச் 09ம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திலே மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைகளுக்கமைவாக எதிர்வரும் மார்ச் 30ம் திகதி குறித்த பிரதேசத்தை அகழ்வதென மன்றினால் கட்டளையாக்கப்பட்டது.

அதன் நிமித்தம் கடந்த தினத்திலே நீதிமன்றிலே பிரசன்னமாகியிருந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் சட்த்தரணிகள், பாதிக்கப்பட்டோர் குறித்த மனிதப் புதைகுழி அமைந்துள்ளாக நம்பப்படுகின்ற பிரதேசத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

கௌரவ மன்றினால் அப்பிரதேசம் ஒரு குற்றப் பிரதேசமாக பிரகடணப்படுத்தப்பட்டு பொலிசாரினால் பாதுகாப்புப்பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உள்ளிட்டோர் மேற்கொண்ட அந்த கள விஜயத்தின் போது அந்தப் பாதுகாப்புப் பட்டிகள் அகற்றப்பட்டு பௌதீக ரீதியான மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பிலும் அவதானிக்கப்பட்டது.

இதன்பிரகாரம் நகர்த்தல் பிரேரணை மூலம் குறித்த விடயத்தை மன்றுக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து இன்றைய தினம் கௌரவ மன்றினால் குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயமொன்று மேற்கொள்ளப்படடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையிலே பொலிசாரினால் இடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டிகள் அகற்றப்பட்டிருப்பதோடு, அங்கிருந்த மரமொன்றும் அகற்றப்பட்டிருந்தது. ஆனால் அவை சந்தேகத்திற்கிடமான புதைகுழி அமையப்பட்டதான அந்த இடத்திலே எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்று கௌரவ மன்று திருப்தியடைந்துள்ளது.

அந்த வகையிலே எதிர்வரும் 30ம் திகதி குறித்த அகழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான தோதான கட்டளைகளை மன்று ஆக்கியிருக்கின்றது என்று தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.