Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி அநுர அறிவித்துள்ள நிவாரணம்; பொய் வாக்குறுதிகள் தொடர்பில் சஜித்தின் எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுர அறிவித்துள்ள நிவாரணம்; பொய் வாக்குறுதிகள் தொடர்பில் சஜித்தின் எச்சரிக்கை!

4 months ago
in செய்திகள்

கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் ‘டித்வா’ புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான பொய் வாக்குறுதிகளாக அமைந்துவிடக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பல வாரங்களாக நாம் விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் தீப்பந்தம் ஏந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, இன்று அரசாங்கம் ஒரு நிவாரணப் பட்டியலை முன்வைத்துள்ளது.

இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இவற்றின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என நாம் கூறியபோது அதனை மறுத்தவர்கள், இன்று ஜனாதிபதியின் உரை மூலம் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக இந்த அரசாங்கத்தின் கீழ் மின் உற்பத்தி மிகக்குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தரமற்ற நிலக்கரியால் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதை ஜனாதிபதியே இன்று சபையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தைச் சுருக்குவதன் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது. உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சி ஏற்படும். தேர்தலின் போது வாக்குறுதியளித்தது போல சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்.

தற்போது எதிர்க்கட்சிக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இந்த அழுத்தம் யாரிடமிருந்து வருகின்றது என்பது தெரியவில்லை.

நாம் ஒருபோதும் நாட்டு மக்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம். அரசாங்கம் அறிவித்துள்ள 100 பில்லியன் ரூபாய் நிவாரணப் பொதியில், எரிவாயு விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முற்றாக மறக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணங்கள் சென்றடையாத நிலை காணப்படுகின்றது.

ஒருபுறம் வட் வரியை உயர்த்திவிட்டு, மறுபுறம் சொற்ப நிவாரணங்களை வழங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும். நாட்டில் தற்போது உரங்களுக்குகே கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இது குறித்து அரசாங்கம் எவ்விதப் புரிதலும் இன்றி இருப்பதை ஏற்க முடியாது. விவசாயிகளின் உண்மையான நிலைமையைப் புரிந்து கொண்டு உரத் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
“ட்ரம்ப்பின் வார்த்தைகள் போர் குற்றத்திற்கான அறிகுறி” – சர்வதேச சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம்!

"ட்ரம்ப்பின் வார்த்தைகள் போர் குற்றத்திற்கான அறிகுறி" - சர்வதேச சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.