Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்ய வீரர்கள் எங்களின் ரோபோக்களிடம் சரணடைகின்றனர்; உக்ரைன்

ரஷ்ய வீரர்கள் எங்களின் ரோபோக்களிடம் சரணடைகின்றனர்; உக்ரைன்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

ரஷ்ய வீரர்கள் ரோபோக்களிடம் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், 4 ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வருகிறது.

இந்த போரில், காயமடைந்த வீரர்களை மீட்பதற்கும், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தற்போது பாதுகாப்பான தூரத்திலிருந்து மனிதர்களால் இயக்கப்படும் தரைவழி ரோபோ அமைப்புகளின் பயன்பாட்டை உக்ரைன் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஜேர்மனி உடன் ஒரு ட்ரோன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனி சென்றுள்ளார்.

அங்கு பேசிய அவர், இந்த போரில் முதல்முறையாக ட்ரோன் மற்றும் ரோபோட் உள்ளிட்ட ஆளில்லா தரை அமைப்புகளை மட்டுமே பயன்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதில், ஒரு ரோபோட் அவர்களின் நிலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ​​வெடித்துச் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக அழிக்கப்பட்ட கோட்டைகளிலிருந்து ரஷ்யர்கள் வெளியே வந்து சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 மாதங்களில் முன்னணிப் பகுதிகளில் ட்ரோன்கள் 22,000 க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டுள்ளன என்றும், இதனால் ஏராளமான வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

“உக்ரைனின் பாதுகாப்புத் தொழில்துறையை விட வேறு எந்தத் தொழில்துறையும் இவ்வளவு புதுமையானதாக மாறவில்லை” என ஜேர்மன் சேன்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறினார்.

2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்து, ஜேர்மனி 55 பில்லியன் யூரோக்களை (64 பில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது. மேலும், நடப்பு வரவுசெலவுத் திட்டத்தில் 11.5 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
கடந்த இரு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு!

கடந்த இரு நாட்களில் 36 விபத்துக்கள் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.