Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நோக்கி வந்த வேன் விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே பிரபல வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு!

மட்டக்களப்பு நோக்கி வந்த வேன் விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே பிரபல வர்த்தகர் பரிதாபமாக உயிரிழப்பு!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, ‘மொடர்ன் எலக்ரிகல்’ (Modern Electricals) வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரான நஜிமுதீன் நஷாட் (வயது 39) என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இவர் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, உறவினர் ஒருவரை வழியனுப்பிவிட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சாரதிக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த வர்த்தகர் நஷாட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான வேனை உயிரிழந்தவரின் உறவினரான இளைஞர் ஒருவரே செலுத்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கு; 17 வருடங்களின் பின் ஏர்பஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு 720 கோடி ரூபாய் அபராதம்!

ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கு; 17 வருடங்களின் பின் ஏர்பஸ், ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு 720 கோடி ரூபாய் அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு