Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

1 week ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது எரிபொருள் விலையில் ஓரளவு குறைவு காணப்படுகின்ற போதிலும், மத்திய கிழக்கு போருக்கு முன்னர் உலக சந்தையில் நிலவிய எரிபொருள் விலையை விட தற்போதைய விலை இன்னும் அதிகமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய தினத்திற்கான (29) உலக சந்தையின் எரிபொருள் விலை இன்று பிற்பகலுக்குள் தீர்மானிக்கப்படும், அதற்கமைய அந்த நிலைமைகளை பரிசீலித்த பின்னரே உள்நாட்டு எரிபொருள் விலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எரிபொருள் விலைகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலை திருத்தம் குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படுமா அல்லது தற்போதைய விலையிலேயே விற்பனை செய்ய தீர்மானிக்கப்படுமா என்பது அந்த பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்று (28) ‘WTI’ ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அந்த கப்பலில் 89,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 31ஆம் திகதியளவில் ‘மெர்பன்’ ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அந்த கப்பலில் 95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

June 8, 2026
Next Post
பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு