இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் மொத்தமாக 118.80 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குறிப்பாக, கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெலிஸ்ஸகல மற்றும் ஹுனுகல் ஓயா பகுதிகளில் இந்த அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டவளை பகுதியில் 82 மில்லிமீட்டர் மழையும், கேகாலையில் 70 மில்லிமீட்டர் மழையும், இரத்தினபுரி மாவட்டத்தின் எரத்த பகுதியில் 62 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.








