Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, சின்ன ஊறணி அருள்மிகு ஸ்ரீ ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை பக்திப் பெருக்குடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

நேற்று காலை 7.00 மணியளவில் ஆலயத்தின் பிரதம பூசகர் சிவஸ்ரீ ந.வே. பொன்னுத்துரை அவர்களின் தலைமையில் அம்பாளின் திருக்கதவு திறக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

இத்திருக்கதவு திறக்கும் புனித நிகழ்வில் அம்பாளின் அருளினைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

​சடங்கு உற்சவத்தின் தொடர்ச்சியாக, நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் சின்ன ஊறணி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்களப் பொருட்கள் மற்றும் அடையாளப் பொருட்கள் பக்திப் பூர்வமாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஊர் வளமாகச் சென்று ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

​இவ் வருடாந்த சடங்கு உற்சவமானது நேற்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த உற்சவ காலங்களில் தினசரி மதியம் 1.30 மணிக்கும், அதிகாலை 4.00 மணிக்கும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை வருகின்ற 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ‘பள்ளிச் சடங்கு’ நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டான் செந்தாமரை தீர்த்தக் குளத்தில் அம்பாளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தமாடும் தீர்த்தோற்சவ நிகழ்வும், விசேட பூஜைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு