இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபர் ஒருவரை கொம்பனித்தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், தன்னை இறைவரித் திணைக்கள அதிகாரி என அறிமுகப்படுத்தி பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்னரும் இதேபோன்ற பண மோசடி சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
.








