பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் படை முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 துணை இராணுவப் படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல், கடலோரக் காவல் படை முகாமை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாகவும், இதில் வீரர்கள் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பலுச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
தாக்குதலில் கடலோரக் காவல் படை முகாம் முற்றாக சேதமடைந்ததாகவும், பாதுகாப்புப் படையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








