இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மாறாக, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








