தரமற்ற யானை வெடிகளால் இலங்கையில் சுமார் 30 சதவீத யானைகள் கேட்கும் திறனை இழந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
யானை வெடிகளின் கடுமையான சத்தத்தால் குட்டி யானைகள் உட்பட பல யானைகள் பாதிக்கப்படுவதாகவும், சில யானைகள் முழுமையாகக் கேட்கும் திறனை இழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காடுகளில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் நுழைவதாகவும், மனித-விலங்கு மோதல்களைக் குறைக்க காடுகளில் போதிய உணவு மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








