Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம்; சட்ட மா அதிபர் தீர்மானம்!

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம்; சட்ட மா அதிபர் தீர்மானம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2022 மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 31 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளார்.

சட்டவிரோதமாகக் கூடியமை, கொலை முயற்சி மற்றும் பலத்த காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட 327 குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

2022 மே 9ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அலரி மாளிகைக்கு வந்திருந்த ஆதரவாளர்களுக்கும், காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் நேரில் கண்ட சாட்சியங்கள், சூழ்நிலைச் சான்றுகள் மற்றும் சம்பவ இடத்தில் பதிவான காணொளிகள் தொடர்பான நிபுணர் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட 34 சந்தேகநபர்களில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 31 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

குற்றம் சுமத்தப்படவுள்ளவர்களில் தேசபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மொரட்டுவை முன்னாள் மாநகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட பலர் அடங்குகின்றனர்.

மேலும், தெஹிவளை–கல்கிஸ்ஸை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமல் புஷ்பகுமார டி சில்வா, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே, முன்னாள் மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மற்றும் ‘அரபு வசந்தம்’ என அறியப்படும் அஸங்க நாலக விஜேசிங்க ஆகியோரும் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டாம் என சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, வழக்கை மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்ட மாஅதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்
செய்திகள்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

September 28, 2026
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி

September 28, 2026
Next Post
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய திருட்டு; 1,770 மில்லியன் என அறிக்கை

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய திருட்டு; 1,770 மில்லியன் என அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.