Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண்களின் ஆடை விவகாரத்தில் சுமந்திரன், சாணக்கியன் போன்ற தமிழ் தலைமைகளினால் “வைத்தியசாலை நிர்வாகம் சட்டத்தின்படியே செயற்படுகின்றது” எனக் கூறப்பட்டது, அதே அடிப்படையில் சவுதி அரசாங்கமும் தனது சட்டங்களின்படியே செயற்படுகின்றது என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறியிருக்கலாம். ஆனால், மனிதாபிமான அடிப்படையில் முஸ்லிங்கள் தலையிட்டு அனோஜனின் உயிரைக் காப்பாற்ற முஸ்லிம் எம்.பிக்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் முயற்சித்தனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனையில் இஸ்லாமிய சமூக சங்கம் சனிக்கிழமை மாலை நடத்திய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜனின் விடயத்தில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சவுதி மன்னருக்கு அவரின் விடுதலை தொடர்பில் வேண்டுகோள் விடுத்திருந்ததைச் சுட்டிக்காட்டிய ஹரீஸ், தமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழ் தலைமைகள் முஸ்லிம் தலைமைகளிடம் மேற்கொண்ட முயற்சியை நினைவுபடுத்தி கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் தமது மதக் கடமையின் அடிப்படையில் தலையை மறைத்துச் செல்லும் விவகாரத்தில் எழுந்த பிரச்சினையின்போது, அதற்குத் தீர்வு காண தமிழ் அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை என அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

முஸ்லிம் பெண்களின் கண்ணியத்துடனும் மதக் கடமையுடனும் தொடர்புடைய விடயங்களில், இலங்கையின் ஏனைய வைத்தியசாலைகளில் காணப்படும் நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு வைத்தியசாலையில் மாத்திரம் பிரச்சினை எழுந்திருப்பது தொடர்பிலும் அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்தும், கல்முனை மாநகரம் தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்களால் நீண்டகாலமாக பகிர்ந்து வாழப்படும் பிராந்தியத்தின் முக்கியமான நகரமாகும். அந்த நகரை நிர்வாக ரீதியாகப் பிரிக்க தமிழ் தலைமைகள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். கல்முனை மாநகரத்தைப் பிரிப்பது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோரின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிலத்தொடர்புடையதாக, நியாயமானவையாக இருக்குமானால், அவை தொடர்பாக முஸ்லிம் தலைமைகளுடனும் சிவில் சமூகத்துடனும் கலந்துரையாடி தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிர்வாக ரீதியான மாற்றங்களை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு முன்னர், தமிழ் மற்றும் முஸ்லிம் தலைமைகள் பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வைக் கண்டிருக்க முடியும். கடந்த கால யுத்த சூழ்நிலையில் இடம்பெற்ற தவறுகளை இன்றைய காலகட்டத்தில் மீண்டும் உருவாக்கக் கூடாது எனவும், உண்மையான நல்லிணக்கம் என்பது இரு சமூகங்களின் உரிமைகளையும் மதித்து முன்னெடுக்கப்படும் அணுகுமுறையிலேயே அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ்–முஸ்லிம் பேரவை” போன்ற கூட்டு முயற்சிகள் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கமாகக் கொண்டிருந்தால், இரு தரப்பினரின் நியாயமான பிரச்சினைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு நடவடிக்கை எடுத்ததைப் போன்று, கல்முனை வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையிலும் அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் கல்முனை விவகாரம் தொடர்பாக அதிகளவில் கவலை பேசப்பட்டு வருகிறது என்றார்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ்–முஸ்லிம் ஒற்றுமைக்காக முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தாங்கள் தடையாக இருக்க விரும்பவில்லை. ஹக்கீம், றிசாத் போன்றவர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தை அணுகாமல், அந்த சமூகத்தின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் அரசியல் தலைமைகள் களத்தில் இறங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவரும் கல்முனை மாநகரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் தீவிரமாகச் செயற்பட்டு, அந்த சமூகத்தின் உரிமைகளையும் இருப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கல்முனை மற்றும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் நீதியான தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது முக்கிய வேண்டுகோள் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி

September 28, 2026
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய திருட்டு; 1,770 மில்லியன் என அறிக்கை
செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய திருட்டு; 1,770 மில்லியன் என அறிக்கை

September 28, 2026
Next Post
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.