Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!

11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!

56 minutes ago
in செய்திகள்

பிரித்தானியாவைச் சேர்ந்த 11 வயதான தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன், சர்வதேச சதுரங்க வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தைப் பெற்ற வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற 46ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய போதனா, தனது மூன்றாவது மற்றும் இறுதி WGM தகுதி நிலையையும் (Norm) பூர்த்தி செய்துள்ளார்.

வடமேற்கு லண்டனின் ஹரோ பகுதியைச் சேர்ந்த போதனா, இங்கிலாந்து அணியின் முதன்மை ஆடுகளத்தில் களமிறங்கி, போட்டியின் 11 சுற்றுகளிலும் பங்கேற்றார். இதில் மொத்தமாக 8 புள்ளிகளைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கு தேவையான 2,300 சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை போதனா ஏற்கனவே கடந்திருந்த நிலையில், இந்த ஒலிம்பியாட் தொடரின் மூலம் இறுதி தகுதி நிலையையும் எட்டியுள்ளார்.

தனது சாதனை குறித்து கருத்து தெரிவித்த போதனா, இந்த மைல்கல் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இதனுடன் தாம் நின்றுவிடாமல் எதிர்காலத்தில் மேலும் பல வரலாற்றுச் சாதனைகளை படைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ரஷ்யா மற்றும் உக்ரைனை பிரதிநிதித்துவப்படுத்திய கத்ரீனா லக்னோ மற்றும் சீனாவின் ஹூ யிபான் ஆகியோர் 12 வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்று இளம் சாதனையாளர்களாக இருந்தனர்.

இந்நிலையில், அந்த சாதனையை 11 வயதிலேயே முறியடித்துள்ள போதனா சிவானந்தன், சதுரங்க உலகில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

மேலும், பொதுப் பிரிவில் வழங்கப்படும் உயரிய சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்திற்கான தனது இரண்டாவது தகுதி நிலையையும் இந்தப் போட்டித் தொடரின் மூலம் போதனா பெற்றுள்ளார்.

11 வயதிலேயே உலக சதுரங்க அரங்கில் முத்திரை பதித்துள்ள போதனா சிவானந்தனின் இந்த சாதனை, பிரித்தானியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்
செய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

September 29, 2026
4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!
செய்திகள்

4 கைத்துப்பாக்கிகளுடன் இளைஞன் ஒருவன் கைது!

September 29, 2026
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!
செய்திகள்

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

September 29, 2026
உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு
செய்திகள்

உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு

September 29, 2026
திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்

September 29, 2026
டீசலுக்காக 41 பில்லியன் ரூபா நிவாரணம்
செய்திகள்

டீசலுக்காக 41 பில்லியன் ரூபா நிவாரணம்

September 29, 2026
Next Post
உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு