Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்; எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் பின்னணியில், இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியிலிருந்து விலகினால், அந்த ஒட்டுமொத்த விநியோகத்தையும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் (CPC) தனித்து ஈடுசெய்ய முடியாது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் எரிபொருள் சந்தையில் விநியோக நடவடிக்கைகள் பல நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சர்வதேச சந்தையில் விலை உயர்வதால் லாபம் கிடைக்காத சூழ்நிலை உருவாகி, அந்த நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தினால் நாட்டில் உடனடியாக தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று விளக்கினார்.

அத்தகைய சூழ்நிலையில், முழுமையான விநியோகத்தை தனித்து ஈடுசெய்ய கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் மட்டும் முடியாது என்று அவர் கூறினார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டில் தடையற்ற எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பும் இலக்கும் ஆகும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இரண்டு அல்லது மூன்று நாட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டாலும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கம் மிகவும் பெரியது என்றும், அவ்வாறு வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, தடையற்ற விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக, தனியார் நிறுவனங்களும் தங்களது வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய வகையில் விலையைத் தீர்மானிக்கும் போது நியாயமான பங்கு வழங்கப்படுவது அத்தியாவசியமான காரணியாகும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்
செய்திகள்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

September 30, 2026
புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

புறக்கோட்டையில் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்!

September 30, 2026
8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

September 30, 2026
பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

September 30, 2026
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
Next Post
திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்;  மொனராகலையில் விநோத சம்பவம்

திருட வந்த வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடன்; மொனராகலையில் விநோத சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு