Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

57 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் சதீஷ் நேற்று (30) மாலை நேரில் சென்று விசேட ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளை நேரில் சந்தித்த ஆணையாளர், அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து இந்தியாவுக்குச் சென்றவர்களில் சிலர், மீண்டும் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து இதன்போது மனு கையளித்தனர்.

அத்துடன், முகாமில் வசிக்கும் தமக்கு அடையாள அட்டைகளை வழங்கி அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து தருமாறு அகதிகள் கோரிக்கை விடுத்தனர்.

அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் தமது பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளைப் பெறுவதிலும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், நீண்ட காலமாக முகாமில் பதிவிலுள்ள தமக்கு விசேட தணிக்கை மற்றும் விடுமுறை பெறுவதில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்து நிரந்தர மின் ஊழியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், இரவு வேளைகளில் முகாமின் நுழைவாயிலில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டன

இதேவேளை, இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியர் ஊடாக அறிக்கை பெறப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அத்துடன், முகாமின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் தாம் தொடர்ச்சியாகக் அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

October 1, 2026
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன
செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன

October 1, 2026
திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
Next Post
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு