Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய உளவுத்துறை மற்றும் இராணுவ உளவுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசமடைந்துள்ள அவரது உடல்நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு மனித உரிமைகள் நிபுணர் குழுக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கடும் கவலை வெளியிட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், கைது செய்யப்பட்டு 103 நாட்களுக்கும் மேலாகியும் அவரிடம் குறைந்தளவிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கும் மேலாகியும் அவர் எந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்பது நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சிறிய சிறை அறையில் அடைத்து வைக்கப்பட்டமை, தூக்கமின்மை, வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சித்தமை உள்ளிட்ட சித்திரவதைக் குற்றச்சாட்டுகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜூன் 6ஆம் திகதி ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை அல்லது இதயச் சாதனம் பொருத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

அத்துடன், விசாரணைகளை நடத்தும் அதிகாரிகள் மீதான தனிப்பட்ட பழிவாங்கல் குறித்த சந்தேகங்கள், வழக்கறிஞர்களைச் சந்திக்கத் தடைவிதித்தமை மற்றும் சிசிடிவி காட்சிகளை அழிக்க முயன்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் ஐ.நா. கவனம் செலுத்தியுள்ளது.

சுரேஷ் சலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர் மேலும் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், அவரது தடுப்புக் காவல், மருத்துவப் பாதுகாப்பு, சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான எட்டு முக்கிய விடயங்களுக்கு 60 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. நிபுணர் குழுக்கள் கோரியுள்ளன.

மேலும், சுரேஷ் சலேவின் உயிருக்கும் உடல் மற்றும் மனநலத்திற்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளன. இந்த அறிக்கையும் இலங்கை அரசாங்கத்தின் பதிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு
செய்திகள்

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

October 1, 2026
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன
செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன

October 1, 2026
திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
Next Post
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.