Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் 15 பிரதான கடற்றொழில் மாவட்டங்களில் விசேட மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பது தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

ஏற்கனவே, நடைபெற்ற கலந்துரையாடல்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 பிரதான கடற்றொழில் மாவட்டங்களை உள்ளடக்கிய விசேட குழுக்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் முன்னேற்றம் மற்றும் குழுக்களைச் செயற்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கமைய, கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், சிலாபம், அம்பாறை, முல்லைத்தீவு, புத்தளம், காலி, மாத்தறை, தங்காலை, களுத்துறை மற்றும் மன்னார் ஆகிய 15 மாவட்டங்களை மையப்படுத்தி விசேட குழுக்களை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இக்குழுக்களில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார், கடற்படையினர், கடலோரப் பாதுகாப்புப் படையினர், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரை உள்ளடக்கி, மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேலும் பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கும் இக்குழுக்கள் பங்களிக்கும்.

மேலும், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துதல், தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் புதிய சட்ட ஏற்பாடுகளின் அவசியம் குறித்து ஆராய்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி), சிரேஷ்ட ஒருங்கிணைப்புச் செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், கடற்படைத் தளபதி, கடலோரப் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் கடல்சார் மற்றும் சுற்றுலாப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டபூர்வமான கடற்றொழில் நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து வலுவான கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பொறிமுறையை உருவாக்குவதே இவ்விசேட மாவட்ட மட்டக் குழுக்களை அமைப்பதன் பிரதான நோக்கமாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்
செய்திகள்

நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்

October 1, 2026
இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 1, 2026
குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!
செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

October 1, 2026
அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!
செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!

October 1, 2026
4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
Next Post
இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.