Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

55 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தை பாடசாலையில் கொண்டாடிவிட்டு அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய ஆசிரியை ஒருவர் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பாடசாலை அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (06) மட்டக்களப்பு திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகர் சூரியா வீதியைச் சேர்ந்த 58 வயதுடைய கமலநாதன் மதிவதனி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வலையிறவு த.க. பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீட்டிற்கு பயணித்துள்ளார்.

இதன்போது, திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பின்னால் வந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவரும் வீதியில் விழுந்துள்ளனர். இதன்போது ஆசிரியை மீது கனரக வாகனம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் சாரதி, வாகனத்தை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கனரக வாகனத்தை மீட்டு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த ஆசிரியையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!
செய்திகள்

பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

October 6, 2026
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
Next Post
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு