Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

59 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த வீடொன்றில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மேசன் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணையடி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய சாமித்தம்பி குமாரசிங்கம் என்ற மேசன் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான இன்று காலை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இரு மேசன் தொழிலாளர்கள் கொங்கிறீட் இடுவதற்கான சட்டிங் பலகைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது எதிர்பாராத விதமாக கட்டிட சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்துள்ளது. இதில் சாமித்தம்பி குமாரசிங்கம் சம்பவ இடத்திலேயே சிக்குண்ட நிலையில், மற்றைய தொழிலாளியும் காயமடைந்துள்ளார்.

இருவரும் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சாமித்தம்பி குமாரசிங்கம் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த மற்றைய தொழிலாளி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!
செய்திகள்

பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

October 6, 2026
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
Next Post
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு