திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை கைதிகளுக்கு உலர் உணவு விநியோகித்த விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்தே ரூ. 1,235,000 இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.
குறித்த பணத்தைச் நேரடியாகப் பெறாமல், பிறிதொரு சிறைச்சாலை அதிகாரி மூலமாகப் பெறுவதற்கு உதவி அத்தியட்சகர் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அதிகாரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்







