Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாவது வாசிப்பு இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 

கடந்த 25 ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு கூடியபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெறும். 

அதனைத் தொடர்ந்து நவம்பர் 13 முதல் 20 வரை ஏழு நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை 19 நாட்கள் நடைபெறும். 

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதன் மூலம் 2027 வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற நடவடிக்கை நிறைவடையும். 

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரச விடுமுறை நாட்களைத் தவிர சனிக்கிழமைகளிலும் பாராளுமன்றம் கூடவுள்ளது. 

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது ஆளும்கட்சிக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் விவாத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், குழு நிலை விவாதத்தின் போது அது ஆளும்கட்சிக்கு 40 சதவீதமாகவும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ கைது
செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷ கைது

October 7, 2026
தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

October 7, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

October 7, 2026
குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை
செய்திகள்

குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

October 7, 2026
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
Next Post
தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு