சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவின் உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறும், அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே நம்புமாறும் இந்தியத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா வழங்கி வரும் ஆதரவை எதிர்த்து, ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர் சவுதி அரேபியாவை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்து வரும் பின்னணியில் இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் தங்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








