களுத்துறை, நாகொடை பகுதியில் இன்று (09) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை – நாகொடை வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








