Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் சுகநலன்களை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டுள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.

ரியாத் தலைநகரில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தச் சிறைச்சாலைக்குச் சென்ற தூதுவர், அனோஜன் சிவராசாவைச் சந்தித்து அவரது தற்போதைய நிலைமை மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது தூதுவர், அனோஜனுடன் விரிவாகக் கலந்துரையாடியதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரது தேவைகள் மற்றும் தற்போது அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அனோஜனுக்குத் தேவையான அனைத்து தூதரக (Consular) மற்றும் சட்ட உதவிகளையும் வழங்குவதற்குத் தூதரகம் கடமைப்பட்டுள்ளதாகத் தூதுவர் இதன்போது மீண்டும் ஒருமுறை உறுதி அளித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நேரடித் தொடர்பாடல்களை இலகுபடுத்தும் வகையில், தூதுவரைத் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொள்வதற்கான தகவல்களும் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகளால் அவரது நலன்புரி விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கைத் தூதுவர் இந்த விஜயத்தின் போது தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை வைத்திருடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!
செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

October 10, 2026
436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

October 10, 2026
வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!
செய்திகள்

வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!

October 10, 2026
ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!
செய்திகள்

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

October 10, 2026
கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

October 10, 2026
கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!
செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!

October 10, 2026
Next Post
களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் மட்டு வாழைச்சேனையில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு